/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோதுமை விதை விதைத்த தினம்: வெலிங்டனில் சிலைகள் திறப்பு
/
கோதுமை விதை விதைத்த தினம்: வெலிங்டனில் சிலைகள் திறப்பு
கோதுமை விதை விதைத்த தினம்: வெலிங்டனில் சிலைகள் திறப்பு
கோதுமை விதை விதைத்த தினம்: வெலிங்டனில் சிலைகள் திறப்பு
ADDED : செப் 15, 2025 08:56 PM
குன்னூர்; குன்னுார் வெலிங்டன் பகுதியில்,கோதுமை விதை பெருக்கத்தின் முதல் விதை நடவு செய்ததன் நினைவு விழா நடந்தது.
குன்னுார் வெலிங்டன், கிடங்கு பகுதியில் உள்ள, இந்திய கோதுமை ஆராய்ச்சி நிலையத்தில், அமெரிக்க வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாக், பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் சுவாமிநாதன் ஆகியோர், 1965, செப்.13ல் முதல் கோதுமை விதை பெருக்கத்தின் முதல் விதை நட்டதை நினைவு கூரும் விழா நடந்தது.
விழாவிற்கு தலைமை வகித்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மைய இயக்குனர் மற்றும் துணை வேந்தர் டாக்டர் சீனிவாசராவ் தலைமை வகித்து பசுமை புரட்சி குறித்து பேசினார். தொடர்ந்து, நார்மன் போர்லாக் மற்றும் சுவாமிநாதன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்தார். விழாவில் ஆராய்ச்சி இணை இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன், தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வெலிங்டன் கோதுமை ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் சிவசாமி, முதன்மை விஞ்ஞானிகள் ஜெயப்பிரகாஷ், நல்லதம்பி, உமா, நஞ்சுண்டன் உட்பட பலர் செய்திருந்தனர்.