'ஒரு நுாலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்'
'ஒரு நுாலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்'
ADDED : ஜூன் 25, 2026 02:32 AM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: ஊட்டி அருகே உள்ள கம்பட்டி கிளை நுாலகத்தில், தேசிய புத்தக வாசிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
நுாலக வாசகர் வட்ட தலைவர் பெள்ளன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,'சமுதாய முன்னேற்றத்தில் நுாலகத்தின் பங்கு' என்ற தலைப்பில், புத்தகம் வாசிப்பு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நுாலகர் சையத் அஸ்லாம் பேசுகையில், ''ஒரு நுாலகம் திறந்தால், ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. மாணவர்கள் பள்ளி பருவத்தில், நுால்களை வாசிப்பதன் வாயிலாக, கல்வியிலும், சமுதாய மேம்பாட்டிலும் முன்னேற முடியும்,'' என்றார்.
