தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஜெகதளா சாலை விரிவுப்படுத்துவது எப்போது? போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிப்பு

ஜெகதளா சாலை விரிவுப்படுத்துவது எப்போது? போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிப்பு

ஜெகதளா சாலை விரிவுப்படுத்துவது எப்போது? போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிப்பு


UPDATED : நவ 22, 2026 06:15 PM

ADDED : நவ 22, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 06:15 PM ADDED : நவ 22, 2026 06:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னூர் அருவங்காடு ஜெகதளா சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போதிய வாகனப் பார்க்கின் வசதி இல்லாத நிலையில் இருசக்கர வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது.

அருவங்காடு ஆர்ச் முதல் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு வரை தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த சாலையில் ஒரே சமயத்தில் இரு மினி பஸ்கள் வரும்போது, கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பிற வாகனங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், பணிகளுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இரவு நேரங்களிலும் இதே போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றி விரிவுபடுத்தவும், சீரமைப்பு பணிகளில் போலீசாரும் ஈடுபட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us