/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது? அதிகாரிகள் மவுனத்தால் அதிருப்தி

ADDED : பிப் 22, 2024 11:46 PM

பந்தலுார்:பொன்னானி பகுதியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடத்தை திறக்க வேண்டும். என, பெற்றோர் வலியுறுத்தி யுள்ளனர்.
பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பொன்னானி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கன்வாடி கட்டடம் சிதிலமடைந்து மழை காலங்களில் தண்ணீர் ஒழுகி, குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித் தர இப்பகுதி கவுன்சிலர் சற்குணசீலன் மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தார்.
பின், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கடந்த ஆண்டு ஆக., மாதம், 18- லட்சம் ரூபாய் செலவில், புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
குழந்தைகளை கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் மற்றும் நல்ல நிலையில் கட்டடம் கட்டப்பட்டதால், குழந்தைகளும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், கட்டடம் கட்டி, 7 மாதங்கள் கடந்த பின்னரும், அதனை முறையாக திறந்து அங்கன்வாடி மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கட்டடம் செயல்படாமல் பாழடைந்து வருவதுடன், பழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தில், குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கட்டடம் சிதிலமடையும் முன் அதனை திறக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.