/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விபத்துகளை தடுக்க சாலையில் வெள்ளை கோடு அவசியம்
/
விபத்துகளை தடுக்க சாலையில் வெள்ளை கோடு அவசியம்
ADDED : டிச 13, 2025 07:59 AM

கோத்தகிரி: கோத்தகிரியில் சாலையின் நடுவில் வெள்ளை கோடு வரையாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி - -ஊட்டி மற்றும் குன்னுார் வழித்தடத்தில் அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளதால், அதிவேகத்தில் வாகனங்கள் சென்று வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கோத்த கிரி-ஊட்டி சாலையில், வெஸ்ட்புரூக் - கட்டபெட்டு இடையே, சமீபத்தில் சாலை சீரமைக்கப்பட்டது. சாலையின் நடுவில் வெள்ளைக்கோடு வரையப்படாமலும், ஒளிரும் 'ரிப்ௌக்ட்' தகடுகள் அமைக்காமலும் காணப்படுகிறது.
இதனால், வாகனங்கள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தவிர, இரவு நேரத்திலும், அதிக மேகமூட்டமான காலநிலையி லும் வாகனங்கள் இயக்கு வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது.
இதனால், விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர், சாலையின் நடுவில் ஒளிரும் தகடுகளுடன், வெள்ளை கோடு வரைய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

