/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எதனால் தொடருது இத்தகைய ஏற்ற தாழ்வு மாறாத குடிசைகள்! அரசின் விலையில்லாத வீடு இங்கு வருமா?
/
எதனால் தொடருது இத்தகைய ஏற்ற தாழ்வு மாறாத குடிசைகள்! அரசின் விலையில்லாத வீடு இங்கு வருமா?
எதனால் தொடருது இத்தகைய ஏற்ற தாழ்வு மாறாத குடிசைகள்! அரசின் விலையில்லாத வீடு இங்கு வருமா?
எதனால் தொடருது இத்தகைய ஏற்ற தாழ்வு மாறாத குடிசைகள்! அரசின் விலையில்லாத வீடு இங்கு வருமா?
ADDED : ஜன 09, 2024 10:21 PM

கூடலுார்:கூடலுார் முண்டகுன்னு பழங்குடி கிராம மக்கள், குடிசைகளுக்கு மாற்றாக அரசின்
தொகுப்பு வீடு கிடைக்கும் என்ற வாக்குறுதியை மட்டும் நம்பி, எவ்வித
அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வசித்து வரும், பூர்வ குடிமக்களான பழங்குடியினருக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அத்திட்டங்கள் பல கிராமங்களுக்கு இன்றும் சென்றடையவில்லை. இதனால், பல கிராமங்களில் பழங்குடியினர் இன்று, குடிசைகளை வாழ்விடமாக கொண்டு வசித்து வருகின்றனர்.
அதில், கூடலுார், பாண்டியர் 'டான்டீ' அருகே அமைந்துள்ள புளியம்பாறை முண்டகுன்னு பழங்குடி கிராமும் ஒன்று. இங்கு, 24 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.
குடிசையில் தொடரும் வாழ்க்கை
பெரும்பாலான பழங்குடியினர் வனத்தில் கிடைக்கும் குச்சி மற்றும் மூங்கில்கள் அல்லது 'பிளாஸ்டிக்' பயன்படுத்தி சுற்று சுவரும்; பிளாஸ்டிக் அல்லது வனத்தில் கிடைக்கும் புற்களை கொண்டு மேற்கூரை கொண்ட குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
'குடிசைகளுக்கு மாற்றாக அரசின் தொகுப்பு வீடு அமைத்து தர வேண்டும்,' பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது தொடர்பாக அதிகாரிகள் பல முறை ஆய்வு செய்து சென்றனர். தேர்தலின் போது ஓட்டு கேட்டு வரும் அரசியல் வாதிகளின் முக்கிய வாக்குறுதி தொகுப்பு வீடு கட்டும் பணியாக இருந்து வருகிறது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.
யானைகள் உட்பட பிற விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில், காலை; மாலையில் அச்சத்துடன் பணிக்கு சென்று வருகின்றனர். நடைபாதை, முழுமையான சாலை வசதி, குடிநீர் வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
மின் வசதி வந்தும் பயனில்லை
இது குறித்து இப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், கடந்த ஆண்டு, இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டாலும், அரசின் இலவச தொகுப்பு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராததால் பழங்குடி மக்கள் மழை மற்றும் வெயில் காலத்திலும் அவதிப்படுகின்றனர். மழை காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் ஒழுகுவதால் மின்சாரம் பயன்படுத்தவும் அச்சப்படும் சூழல் உள்ளது.
பழங்குடியினர் கூறுகையில்,'வனத்தை ஒட்டிய பகுதியில் குடிசையில் வாழ்ந்து வருகிறோம். இதனால், வனவிலங்குகள் வந்தால் கூட வீடுகளுக்குள் பாதுகாப்புடன் வசிக்க முடியாத சூழல் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பான தொகுப்பு வீடு கட்டி தருவதுடன், நடைபாதை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும். இந்த வசதிகள் எப்போது எங்களுக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை,' என்றனர்.

