தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பரவலாக பெய்து வரும் மழை: பசுமைக்கு மாறிய வனப்பகுதி

பரவலாக பெய்து வரும் மழை: பசுமைக்கு மாறிய வனப்பகுதி

பரவலாக பெய்து வரும் மழை: பசுமைக்கு மாறிய வனப்பகுதி


UPDATED : செப் 15, 2026 04:05 PM

ADDED : செப் 15, 2026 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 04:05 PM ADDED : செப் 15, 2026 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் வனப்பகுதிக்கு பசுமைக்கு மாறி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடைமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும், 'எல்நினோ' தாக்கத்தாலும், வறட்சியான காலநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக ஊட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.தேயிலைத் தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்களில் ஓரளவுக்கு ஈரப்பதம் ஏற்பட்டு இருப்பதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

வறட்சியின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் நீரோடைகள் வற்றி வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், பரவலாக பெய்து வரும் மழையால், மஞ்சூர் அருகே கெத்தை வனப்பகுதி பசுமைக்கு மாறி வருகிறது. தாய்சோலை பிரதான நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us