/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் எருமாடு அருகே மனைவி கொலை: கணவன் கைது
/
பந்தலுார் எருமாடு அருகே மனைவி கொலை: கணவன் கைது
ADDED : மார் 23, 2025 10:05 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே எருமாடு திருமங்கலம் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர்கள், நாராயணன் -கல்யாணி தம்பதி.
இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொத்தலகுண்டு என்ற இடத்தில் மணி என்பவருக்கு சொந்தமான, தைலம் காய்ச்சும் குடிலில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதே பகுதியில் உள்ள அறையில் தங்கி இருந்த நிலையில், கடந்த, 21 ஆம்தேதி காலை கல்யாணி,48, உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்த டி.எஸ்.பி., ஜெயபாலன் தலைமையிலான போலீசார், நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டதில், 'உயிரிழந்த கல்யாணிக்கு தான் இரண்டாவது கணவர்; மூன்றாவதாக ஒருவருடன் அவர் கல்யாணி தொடர்பில் இருந்ததால், அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை வரும். சம்பவத்தன்று இருவரும் மது அருந்திய நிலையில், ஏற்பட்ட தகராறில் கல்யாணியின் கழுத்தில், கயிறை கொண்டு இறுக்கி கொலை செய்தேன்,' என, அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நாராயணனை,50, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.