ADDED : செப் 18, 2024 08:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் பாக்கியநாதன் வரவேற்றார். தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். பிரம்மஞானி ராஜ்யஸ்ரீ இறை மற்றும் குரு வணக்கம் பாடினார். பேராசிரியர் சந்திரகலா தவம் நடத்தினர்.
கொளப்பள்ளி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பேராசிரியர் சிவமலை நலவேட்பு நிகழ்ச்சி குறித்து பேசினார். பேராசிரியர் பாஸ்கரன், மனைவி நல வேட்பு நாள் விழா கோட்பாடுகள் குறித்து விளக்கி, தம்பதியருக்கு காந்த பரிமாற்ற தவத்தை நடத்தி வைத்தார். பொருளாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.

