/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடையில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
/
கோடையில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோடையில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோடையில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ADDED : ஜன 17, 2025 11:25 PM

கூடலுார்; கூடலுார் ஓவேலி பகுதியில், உற்பத்தியாகும் ஆறுகளில் நீர் வரத்து குறைந்து வருவதால் கோடையில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
கூடலுாரில் ஓவேலி பகுதியாகும் பார்வுட், சூண்டி - சுண்ணாம்பு பாலம் ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகள், பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் கலக்கின்றன. இதன் தண்ணீர் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்து வருகிறது. கூடலுார் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
கடந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட அதிகம் பருவமழை பெய்ததால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தடையின்றி கிடைத்தது. தற்போது, ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், இங்குள்ள ஆறுகளில், நீர்வரத்து குறைந்துள்ளது.
கோடை மழை இன்றி, இதேநிலை தொடர்ந்தால், வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக, குடிநீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகளால் மனித- விலங்கு மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்க, இங்குள்ள நீர் நிலைகளில் சிறிய தடுப்பணைகள் அமைத்து வனவிலங்குகளின் குடிநீர் தேவையை வனத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கோடையில், வனத்தில் ஏற்படும் வறட்சியால், யானைகள் உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வருவதால், மனித- வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, நீர் நிலைகளில் சிறிய தடுப்பணைகள் அமைப்பதன் மூலம், அவைகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும்.
இதற்கான பணியை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

