/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை
ADDED : ஆக 15, 2025 08:38 PM

கோத்தகிரி; கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் பகுதியில், யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, 6:30 மணி அளவில், ஈரோட்டில் இருந்து கோத்தகிரிக்கு அரசு பஸ் வந்தது.
அப்போது, தட்டப்பள்ளம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த யானை, அரசு பஸ்சை வழி மறித்து சாலையில் நின்றது. பஸ் டிரைவர், சாதுர்யமாக பஸ்சை இயக்காமல் நிறுத்தினார். சாலையில் நின்றிருந்த யானை, திடீரென பஸ்சை நோக்கி சென்று, பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்து சப்தம் எழுப்பினர். அதன்பின், சாலையை விட்டு, தேயிலை தோட்டத்திற்குள் யானை இறங்கியதை அடுத்து பஸ் இயக்கப்பட்டது. இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.