/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை: தொழிலாளர்கள் அச்சம்; விரட்டிய வனத்துறை

ADDED : ஜூலை 18, 2025 09:09 PM

கூடலுார்,: கூடலுார் மரப்பாலம் பகுதியில் கோழிக்கோடு சாலையை ஒட்டிய தனியார் தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டத்தை (டான்டீ) ஒட்டிய குண்டம்புழா வனப்பகுதியில் சில காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இரவு நேரத்தில், டான்டீ தேயிலை தோட்டத்தை கடந்து மரப்பாலம், பால்மேடு, சீனக்கொல்லி, அட்டிகொல்லி, புளியாம்பாறை கிராமங்களில் முகமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வன ஊழியர்கள் தொடர்ந்து, இரவில் கண்விழித்து கண்காணித்து, விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மரப்பாலம் -பால்மேடுக்கு இடைப்பட்ட, கோழிக்கோடு சாலையை ஒட்டிய தனியார் தேயிலை தோட்டத்தில், நேற்று காலை காட்டு யானை முகாமிட்டது. உள்ளூர் மக்கள் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள், கோழிக்கோடு சாலையில் சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தி, யானையை விரட்டினர். யானை வனப்பகுதிக்கு சென்றது. இதனால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதிக்கு மூன்று யானைகள் நாள்தோறும் இரவில் முகாமிட்டு அதிகாலை வனத்துக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், இவைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'என்றனர்.