/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பண்ணையில் நுழைந்த காட்டு யானைகள்; 10 ஆயிரம் பட்டர் புரூட் செடிகள் சேதம்
/
பண்ணையில் நுழைந்த காட்டு யானைகள்; 10 ஆயிரம் பட்டர் புரூட் செடிகள் சேதம்
பண்ணையில் நுழைந்த காட்டு யானைகள்; 10 ஆயிரம் பட்டர் புரூட் செடிகள் சேதம்
பண்ணையில் நுழைந்த காட்டு யானைகள்; 10 ஆயிரம் பட்டர் புரூட் செடிகள் சேதம்
ADDED : ஜன 08, 2025 10:29 PM

கூடலுார்; கூடலுார் தோட்டக்கலை பண்ணையில் நுழைந்த, காட்டு யானைகள், நர்சரியில் பயிரிட்டிருந்த, 10 ஆயிரம் பட்டர் புரூட் செடிகளை சேதப்படுத்தியது.
கூடலுார் நாடுகாணி  அருகே உள்ள, பொன்னுார் தோட்டக்கலை பண்ணை நர்சரியில் தேயிலை, காபி, குறுமிளகு, பட்டர் புரூட், பாக்கு, கிராம்பு, கருகப்பட்டை உள்ளிட்ட செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இப்பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்து நர்சரி மற்றும் அதில் உற்பத்தி செய்யப்படும் செடிகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று, அதிகாலை, 2:00 மணிக்கு  பண்ணையில் நுழைந்த யானைகள் நர்சரியை சேதப்படுத்தி அங்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பயிரிட்டு இருந்த செடிகளை சேதம் செய்தன.
பணியில் இருந்த காவலர்கள் சப்தமிட்டு அவைகளை விரட்டினர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சேதமடைந்த செடிகளை, தோட்டக்கலை அலுவலர் விஜய்பாபு பார்வையிட்டார். ஆய்வில், 10 ஆயிரம் பட்டர் புரூட்; 1500 பாக்கு; 500 காபி செடிகளை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
சேதமடைந்த நர்சரியை, பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருள் மொழி வர்மன், தேவாலா வனச்சரகர் சஞ்சீவ், வானவர்கள் சுரேஷ், பாலகிருஷ்ணன், வனக்காப்பாளர் சசிதரன் ஆய்வு செய்தனர்.
வன ஊழியர்கள் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'காட்டு யானைகள் நர்சரி மற்றும் அதில் உற்பத்தி செய்யப்படும் செடிகளை சேதப்படுத்துவதை தவிர்க்க, நர்சரி பகுதிக்குள் காட்டு யானைகள் நுழையாத வகையில் சோலார் மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

