/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் மீண்டும் முகாமிட்ட காட்டு யானைகள்
/
மலை பாதையில் மீண்டும் முகாமிட்ட காட்டு யானைகள்
ADDED : மார் 16, 2025 11:49 PM
குன்னுார்; 'குன்னுார் மலை பாதையில் மீண்டும், 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என, வனத்துறையின் அறிவுறுத்தியுள்ளனர்.
குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. சமீப காலமாக இந்த யானைகள் சிங்காரா வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த நிலையில், தற்போது, 7 காட்டு யானைகள் மீண்டும் குன்னுார் -மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு வந்து முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று மதியம் நீண்ட நேரம், ஈச்சமரம் பகுதியில் இருந்த யானைகள் சாலையில் வந்து நின்றன. தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். வனத்துறையினர் கூறுகையில்,'சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த கூடாது; முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என்றனர்.