/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆம்புலன்சை வழிமறித்த காட்டு யானைகள்
/
ஆம்புலன்சை வழிமறித்த காட்டு யானைகள்
ADDED : பிப் 20, 2025 10:16 PM
கோத்தகிரி; கோத்தகிரி அருகே ஆம்புலன்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், சமீப காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வறட்சி காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலாவருவது தொடர்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, குஞ்சப்பனை அருகே உள்ள செம்மனாரை பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவரை அரசு மருத்துவமனையில் அழைத்து செல்ல, கோத்தகிரியில் இருந்து ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. அப்போது, சற்று துாரத்தில் காட்டுயானைகள் கூட்டமாக சாலையில் வழிமறித்து நின்றுள்ளன. இதனால், அச்சம் அடைந்த டிரைவர், ஆம்புலன்சை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில், வனப்பகுதிக்கு காட்டு யானைகள் சென்றதை அடுத்து, நோயாளியை அழைத்து கொண்டு ஆம்புலென்ஸ் சென்றது. அங்கிருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறை ஆய்வு செய்தனர்.

