தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வன விலங்கு கணக்கெடுப்பு முதுமலையில் துவக்கம்

வன விலங்கு கணக்கெடுப்பு முதுமலையில் துவக்கம்

வன விலங்கு கணக்கெடுப்பு முதுமலையில் துவக்கம்


UPDATED : மே 06, 2026 05:47 PM

ADDED : மே 06, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 05:47 PM ADDED : மே 06, 2026 05:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: முதுமலை மசினகுடியில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

முதுமலை புலிகள் காப்பகம் வெளி வட்டமாக, மசினகுடி கோட்ட வனச்சரகங்களில் நடப்பு ஆண்டுக்கான பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் (மே 7) துவங்கி,11 தேதி வரை நடக்கிறது.

இதற்கான பயிற்சி முகாம் தெப்பக்காடு மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில், வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலும், மசினகுடி கோட்டத்துக்கான பயிற்சி முகாம் மசினகுடியிலும் நேற்று நடந்தது.

தெப்பக்காட்டில் நடந்த பயிற்சி முகாமில் உயிரியலாளர் பழனிச்சாமி, மசினகுடியில் நடந்த பயிற்சி முகாமில் உயிரியலாளர் கிளிடன பங்கேற்று,'வனவிலங்குகள் நேரடி கணக்கெடுப்பு, கால் தடம் உள்ளிட்ட அடையாளங்களும், மறைமுக கணக்கெடுப்பு, தாவரங்கள் கணக்கெடுப்பு முறைகள் குறித்தும், கணக்கெடுப்பு விவரங்களை டேட்டா சீட் மற்றும் மொபைல் செயலியில் பதிவு செய்யும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், ' (மே 7) துவங்கும் பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணிகள், 11ம் தேதி வரை நடக்கிறது. பணியில் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுகின்றனர்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us