/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனவிலங்கு கணக்கெடுப்பு பணி; 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
/
வனவிலங்கு கணக்கெடுப்பு பணி; 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
வனவிலங்கு கணக்கெடுப்பு பணி; 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
வனவிலங்கு கணக்கெடுப்பு பணி; 170 வன ஊழியர்கள் பங்கேற்பு
ADDED : டிச 04, 2024 09:50 PM

கூடலுார்; முதுமலை மசினகுடி வன கோட்டத்தில் பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 170 வன ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம் உள்வட்டம் மற்றும் வெளிவட்டம் பகுதியில் ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.
நடப்பாண்டு, முதுமலை புலிகள் காப்பகம் உள்வட்டம் பகுதியில், பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள், கடந்த மாதம், 19-ல் துவங்கி, 25ல் நிறைவு பெற்றது. தொடர்ந்து, முதுமலை வெளிவட்டமான மசினகுடி வனக்கோட்டம் சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு வனச்சரகங்களில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணிகள், 9ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக வனப்பகுதி, 34 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவுக்கு, 4 முதல் 5 வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மசினகுடி கோட்டத்தியில் பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 170 வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தாவர உண்ணிகள் மாமிச உண்ணிகள் மற்றும் தாவரங்கள் குறித்த விபரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இப்பதிவுகளின் அடிப்படையில் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்,' என்றனர்.