/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இப்போ விழுமோ...எப்போ விழுமோ...! அபாய கட்டத்தில் மண்ணின் மைந்தர்களின் வீடுகள்
/
இப்போ விழுமோ...எப்போ விழுமோ...! அபாய கட்டத்தில் மண்ணின் மைந்தர்களின் வீடுகள்
இப்போ விழுமோ...எப்போ விழுமோ...! அபாய கட்டத்தில் மண்ணின் மைந்தர்களின் வீடுகள்
இப்போ விழுமோ...எப்போ விழுமோ...! அபாய கட்டத்தில் மண்ணின் மைந்தர்களின் வீடுகள்
ADDED : மார் 19, 2025 08:14 PM

பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் குடிசை வீடுகளில் அபாய கட்டத்தில் வசித்து வருகின்றனர்.
கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் குரும்பர், பணியர், காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் குடியிருக்க வீடு கூட இல்லாத சூழலில் அவதிப்பட்டு வருகின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டி தருவதாக கூறிவரும் நிலையில், அவை தரம் குறைவாக உள்ளதால் கட்டி முடிக்கும் முன்னரே, விரிசல் ஏற்பட்டு எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், பந்தலுார் அருகே குழிமூலா கிராமத்தில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள், 26 வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அதில், ஏழு குடிசை வீடுகளாக உள்ள நிலையில், ஒரு குடிசையை காட்டு யானை சேதப்படுத்திய நிலையில், அவர்கள் தற்போது குடியிருக்க வீடு இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். மீதம் உள்ள வீடுகள் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை மற்றும் குடிநீர், தெருவிளக்கு என எந்த வசதிகளும் இதுவரை இல்லை.
இந்த நிலை மாற, மாவட்ட கலெக்டர் இது போன்ற கிராமங்களை நேரடியாக ஆய்வு செய்து, பழங்குடியின மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்ப வீடு, சாலை, நடைபாதை மற்றும் குடிநீர், தெரு விளக்கு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர முன் வர வேண்டும்.
கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், ''தேர்தல் நேரங்களில் மட்டும் நாங்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவைப்படும் நபர்களாக உள்ளோம். அதற்கு பின்னர் நாங்கள் துாக்கி வீசப்படும் நபர்களாக மாறி விடுகிறோம்.
எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்று கொள்ளப்படாத நிலையில், தற்போதும் மிகுந்த துயரத்துடன் வாழும் சூழல் தொடர்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்,'' என்றார்.