/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிழற்குடை வசதியின்றி பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

ADDED : ஜூன் 23, 2025 04:35 AM

ஊட்டி: 'ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நிழல்குடை வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டி அருகே கால்ப் கிளப் பகுதியில் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, 700 படுக்கை வசதிகளுடன், பழங்குடியினருக்கு, 50 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் அனைத்து துறைகள் செயல்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள், உறவினர்கள் அமர்வதற்கு உரிய வசதிகள் இல்லை. சிகிச்சைக்கு வருபவர்கள் மழை , வெயிலில் சாலையில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் ஆகியவை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் நிழல் குடை வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.