/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பு அடிக்கடி தொடரும் பிரச்னை; போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா?

ADDED : ஏப் 27, 2025 09:29 PM
ஊட்டி : 'தொட்டபெட்டா சந்திப்பில் சுற்று பஸ்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்று பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து துவங்கும் சுற்று பஸ், படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா சந்திப்பு வரை சென்று திரும்பும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொட்டபெட்டா சந்திப்பு வரை செல்லும் சுற்று பஸ்கள் அங்கு சுற்றுலா பயணியரை இறக்கி விடுகின்றனர். ஒரு சுற்று பஸ் மட்டும் தொட்டபெட்டா சிகரம் வரை சென்று வருவதாக கூறப்படுகிறது. பிற சுற்றுலா பயணிகள் தனியார் வாகனங்களுக்கு அதிக கட்டணம் கொடுத்து தொட்டபெட்டா சிகரம் செல்கின்றனர். இதனால், ஏற்படும் நெரிசலால் அடிக்கடி பிரச்னை நிலவுகிறது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'தொட்டபெட்டா சந்திப்பு வரை வரும் சுற்றுபஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பின்பு, வாடகை ஜீப்பில் மீண்டும் நாங்கள் எதற்கு கட்டணம் கொடுக்க வேண்டும். அதற்கு தான் பஸ்சில் டிக்கெட் வாங்கிவிடுகிறோம். இதனால், அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. அதற்கு தொட்டபெட்டாவுக்கு மட்டும் எங்களின் சொந்த வாகனங்கள் செல்ல அனுமதித்தால் இந்த பிரச்னை ஏற்படாது,' என்றனர்.