ADDED : நவ 27, 2024 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; 'தாவரவியல் பூங்கா அருகே நடைபாதையில் இடையூறாக உள்ள தடுப்பு கம்பியை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள நடைபாதை முன்பாக சாலையில் இடைஞ்சலாக தடுப்பு கம்பி உள்ளது.
இதனால், சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து சுற்றுலா பயணியர் சிலர் புகார் தெரிவித்தும் அதனை சீரமைக்கவில்லை. எனவே, சுற்றுலா பயணிகள் தடுக்கி விழுவதற்கு முன்பு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.