UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:56 PM
கூடலூர்: மேல் கூடலூர் அருகே, தனியார் தேயிலை தோட்டத்தில் செந்நாய்கள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேல் கூடலூர், சில்வர் கிளவுட் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உலா வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை தேயிலைத் தோட்டத்தில் உள்ள, பாறையில் செந்நாய்கள் 'ஹாயாக' ஓய்வெடுத்தது. இதனை உள்ளூர் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ரசித்து சென்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், கூட்டமாக உலாவரும் செந்நாய்கள், மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, அவைகளின் அருகே, சென்று இடையூறு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ' என்றனர்.
