/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டிய பெண் கைது
/
வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டிய பெண் கைது
ADDED : பிப் 20, 2025 09:55 PM

கோத்தகிரி, ; கோத்தகிரியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி குமரன் காலனியை சேர்ந்த, கட்டட தொழிலாளி விஜயகுமார் என்பவரது மனைவி சுமதி. இவரது, குடும்ப செலவுக்காக, அதே பகுதியை சேர்ந்த, சந்திரவதனி என்பவரிடம், முதல் தவணையாக, 50,000 ரூபாய்; இரண்டாவது தவணையாக, 3 லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார்.
பணம் வாங்கும் போது சந்தரவதனி, 10 சதவீதம் பணத்தை முன் பணமாக எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை கொடுத்துள்ளார். முதலில் வாங்கிய பணத்திற்காக, 1.90 லட்சம் ரூபாய், இரண்டாவது தவணையாக வாங்கிய பணத்திற்காக, 2.70 லட்சம் ரூபாய் வட்டி தொகையை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், 'அசலும் வட்டியும் சேர்த்து, 1.40 லட்சம் ரூபாய் உடனடியாக தர வேண்டும்,' என, சுமதியை தொந்தரவு செய்து மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சுமதி, கோத்தகிரி போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி சந்திரவதனியை கைது செய்தனர்.