/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்ததில் பெண் பலி
/
கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்ததில் பெண் பலி
ADDED : நவ 30, 2024 05:00 AM

பாலக்காடு : பாலக்காடு அருகே, இறைச்சிக் கோழி லோடு ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் ஆலங்கடலில் அருகே உள்ள, ஆற்றில் மீன் பிடிப்பதற்காக மைசூரில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன் வந்த பார்வதி, 40, குடும்பத்தினர், அப்பகுதியில் சாலையோர திண்ணையில் நேற்று முன்தினம் இரவு படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, பழநியில் இருந்து மலப்புரம் எடப்பாள் பகுதிக்கு கோழி லோடு ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், கடை திண்ணையில் துாங்கிக்கொண்டிருந்த பார்வதி லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணன், 70, அவரது மனைவி சாவித்திரி, 45, மகன் வினோத் 25, ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், பொக்லைனை வரவழைத்து லாரியை துாக்கினர். அதன்பின், பார்வதியின் உடலை மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரநல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் அஜித், 32, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.