தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆட்டோ மீது மரம் விழுந்து பெண் பலி

ஆட்டோ மீது மரம் விழுந்து பெண் பலி

ஆட்டோ மீது மரம் விழுந்து பெண் பலி


UPDATED : மே 01, 2026 08:08 PM

ADDED : மே 01, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 08:08 PM ADDED : மே 01, 2026 08:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கல்கண்டி, பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் செரியானின் மனைவி சோனியா, 45. நேற்று முன்தினம் மாலை சோனியா, மகள் எமியுடன் பாக்குளம் பகுதியிலிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார்.

மண்ணார்க்காடு சாலையில் சென்ற போது, செம்மண்ணுார் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் சாய்ந்து, ஆட்டோவின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த சோனியாவை அப்பகுதி மக்கள் மீட்டு, கூக்கம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விபத்தில் அவரது மகள் எமி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பாக்குளம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் இருவரும் லேசான காயமடைந்தனர்.

இந்த விபத்து நடந்த இடத்தின் அருகிலேயே, மேலும் இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அகளி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us