/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்சாரம் பாய்ந்து பெண் பலி; வீட்டு உரிமையாளரிடம் விசாரணை
/
மின்சாரம் பாய்ந்து பெண் பலி; வீட்டு உரிமையாளரிடம் விசாரணை
மின்சாரம் பாய்ந்து பெண் பலி; வீட்டு உரிமையாளரிடம் விசாரணை
மின்சாரம் பாய்ந்து பெண் பலி; வீட்டு உரிமையாளரிடம் விசாரணை
UPDATED : ஏப் 16, 2025 07:13 AM
ADDED : ஏப் 15, 2025 09:29 PM
ஊட்டி, ; ஊட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி அருகே இடுஹட்டியை சேர்ந்த நஞ்சன் இவருடைய மனைவி நஞ்சம்மாள், 68. நேற்று மதியம் தோட்ட வேலையை முடித்து வீடு திரும்பினார்.
அப்போது, வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் , அங்குள்ள குடியிருப்பின் மின்சாரம் கம்பி உரசி இருந்தது. பொன்னம்மாள் கம்பியில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பொன்னம்மாளின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இச்சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.