/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லாரியில் இருந்து தவறி விழுந்த பெண் காயம்
/
லாரியில் இருந்து தவறி விழுந்த பெண் காயம்
ADDED : பிப் 18, 2025 09:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சி குப்பை லாரியிலிருந்து, தவறி விழுந்த பெண் தொழிலாளி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த முறையிலான துாய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி,50. இவர் நேற்று குப்பைகளை சேகரித்து கொண்டு, குப்பை லாரியின் பின்பக்கத்தில் நின்றவரே வந்துள்ளார். புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் லாரி வேகமாக வந்த போது நிலை தடுமாறி தனலட்சுமி கீழே விழுந்தார்.
அதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தேவாலா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.