/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'சைபர் கிரைம்' ஆசாமிகளிடம் திருமண பணத்தை இழந்த பெண்
/
'சைபர் கிரைம்' ஆசாமிகளிடம் திருமண பணத்தை இழந்த பெண்
'சைபர் கிரைம்' ஆசாமிகளிடம் திருமண பணத்தை இழந்த பெண்
'சைபர் கிரைம்' ஆசாமிகளிடம் திருமண பணத்தை இழந்த பெண்
ADDED : ஜன 30, 2025 09:30 PM
ஊட்டி;ஊட்டியை சேர்ந்த பெண் ஒருவர் 'டிஜிட்டல் கைது' ஆன்லைன் மோசடியில் சிக்கி, 5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
ஊட்டியை சேர்ந்த, 28 வயது பெண் சென்னையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 'உங்கள் பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது; அந்த பார்சலில், 140 கிராம் எம்.டி.எம்.ஏ., எனப்படும் போதைப்பொருள், 5 பாஸ்போர்ட்டுகள் மற்றும் வங்கி ஆவணங்கள் உள்ளன.
எனவே. உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்,' என, கூறி மொபைல் போனில் சிலர் மிரட்டி உள்ளனர். மேலும், 'எங்கள் அதிகாரி உங்களை காப்பாற்றுவார் அவர் சொல்வதை கேளுங்கள்,' என, மறுபுறம் நம்பிக்கை கொடுக்கும் வகையில் பேசி உள்ளனர்.
இதை நம்பிய பெண், 'இந்த சிக்கலில் இருந்து தன்னை காப்பாற்றும் படியும், அதற்காக தான் எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும்,' கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, 'வங்கி கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக எங்களுடைய கணக்கிற்கு மாற்ற வேண்டும்; விசாரணை முடிந்த பின்னர் அந்த பணம் உங்களுடையதுதான் என உறுதி செய்யப்பட்டு, மீண்டும் உங்கள் வங்கி கணக்கு அனுப்பப்படும்,' என, சைபர் கிரைம் ஆசாமிகள் கூறினர்.
இதை நம்பிய அந்த பெண், ஊட்டியில் உள்ள வங்கி கணக்கில் மட்டும் பணம் இருப்பதாக கூறியுள்ளார். 'உடனடியாக ஊட்டிக்கு சென்று, பணத்தை மாற்ற வேண்டும்,' என, கூறி உள்ளனர்.
ஊட்டியில் உள்ள வங்கிக்கு சென்ற பெண், வங்கி கணக்கில் இருந்த பணத்தை ஆன்லைன் மூலம் மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
பணம் கைமாயறியவுடன், அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீனா கூறுகையில்,''அந்த இளம் பெண்ணுக்கு தந்தை இல்லாததால் அவருடைய அத்தை, இளம் பெண்ணின் திருமணத்திற்காக, 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை மர்ம நபர்களிடம் இளம்பெண் இழந்துள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
இது போன்ற, 'டிஜிட்டல் கைது' ஆன்லைன் மோசடி குறித்து யாராவது மிரட்டினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் மக்கள் புகார் செய்ய வேண்டும்,'' என்றார்.