/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் கொலை: வீட்டின் உரிமையாளர் கைது
/
பெண் கொலை: வீட்டின் உரிமையாளர் கைது
ADDED : ஏப் 03, 2025 11:26 PM

கூடலுார்; கூடலுாரில் பெண் கொலை தொடர்பாக, வாடகை கட்டடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் காசிம்வயல் பகுதியை சேர்ந்த ஜெனிபர் கிளாடிஸ், 32; தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். கணவனை பிரிந்த இவர், இரண்டு குழந்தைகளுடன், அலி,40, என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
அலி ஏற்கனவே, திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவர்கள், இருவரும் கடந்த ஓராண்டாக நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெனிபர் கிளாடிஸ் வேறொரு நபருடன் பழகுவதாக கூறி, அவரிடம் அடிக்கடி அலி தகராறு செய்துள்ளார். இப்பிரச்னை தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று முன்தினம், இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில், ஆத்திரமடைந்த அலி கத்தியால் ஜெனிபர் கிளாடிசை வெட்டி கொலை செய்தார். தொடர்ந்து, கூடலுார் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீசார் சம்பவம் இடத்துக்கு சென்று, இறந்த ஜெனிபர் கிளாடிஸ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, கூடலுார் இன்ஸ்பெக்டர் (பொ) சிவக்குமார், எஸ்.ஐ., கவியரசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து, அலியை கைது செய்தனர்.

