/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானையை பார்த்து ஓடிய பெண்; கீழே விழுந்து படுகாயம்
/
யானையை பார்த்து ஓடிய பெண்; கீழே விழுந்து படுகாயம்
ADDED : டிச 17, 2024 09:39 PM
கூடலுார்; கூடலுார் பாண்டியார் டான்டீ, குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை பார்த்து வீட்டுக்குள் ஓடிய பெண், கீழே விழுந்து காயமடைந்தார்.
கூடலுார், இரும்புபாலம் அருகே, பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் சரஸ்வதி,58. இவர் நேற்று அதிகாலை,6:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது வீட்டின் வாசலில் நின்றிருந்த காட்டு யானையை பார்த்து அலறி அடித்து, வீட்டுக்குள் ஓடி கீழே விழுந்து உயிர் தப்பினார். அதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் சப்தமிட்டு யானையை விரட்டினர். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.