ADDED : ஆக 21, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு அருகே, வீட்டில் உடலில் தீக்காயங்களுடன் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், ாலக்காடு மாவட்டம், செர்ப்புளச்சேரி குலுக்கல்லூர் மாப்பாட்டுகரை பகுதியை சேர்ந்த சங்கரனின் மகள் லீனா, 58. தனித்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டின் பின்பகுதியில் தீக்காயங்களுடன் அவர் சடலமாகக் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செர்ப்புளச்சேரி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
