/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன்கொடுமையில் பாதிக்கும் மகளிர்; தீர்வுக்கு வள மையம் துவக்கம்
/
வன்கொடுமையில் பாதிக்கும் மகளிர்; தீர்வுக்கு வள மையம் துவக்கம்
வன்கொடுமையில் பாதிக்கும் மகளிர்; தீர்வுக்கு வள மையம் துவக்கம்
வன்கொடுமையில் பாதிக்கும் மகளிர்; தீர்வுக்கு வள மையம் துவக்கம்
ADDED : நவ 27, 2024 08:57 PM

குன்னுார்; வன்கொடுமை உட்பட பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்படும் பெண்கள், மீண்டு வருவதற்கு வழிவகை செய்யும் அரசின் வானவில் பாலின வள மையம் குன்னுாரில் துவக்கப்பட்டது.
தமிழக அரசின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், குன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வானவில் பாலின வள மையம் துவங்கப்பட்டது. மையத்தை குன்னுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா துவக்கி வைத்தார்.
விழாவுக்கு, குன்னுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர சேகரன், ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வள பயிற்றுனர் திருசெல்வி பேசுகையில், ''வன்கொடுமை, வரதட்சணை, கணவரால் ஏற்படும் பிரச்னை, குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுவர்கள் உட்பட பல்வேறு விதங்களிலும் மகளிருக்கு இந்த மையத்தின் மூலம் தீர்வு காண்பதுடன், மீண்டு வருவதற்கும் வழிவகை செய்யப்பட உள்ளது,'' என்றார்.
ஏற்பாடுகளை, வட்டார மேலாளர் மகேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சீதா, இந்திரா, லீலா, மேரி ஷபினா, கீதா உட்பட பலர் செய்திருந்தனர்.