/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ் பயணத்தால் பெண்களுக்கு பயன்
/
அரசு பஸ் பயணத்தால் பெண்களுக்கு பயன்
ADDED : நவ 20, 2024 09:55 PM
ஊட்டி; 'மாவட்டத்தில் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், அரசு பஸ்சில் பயணம் செய்து பெண்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் சிறப்பான பங்களிப்பை உயர்த்தும் முயற்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்தது. இதில், சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் செயல்படுத்தி வருவதால் பெண்கள் சுயதொழில் தொடங்க அதிக வாய்ப்புகள் உருவாகியதுடன், தனியார் பஸ்களில் பயணிக்கும் பெண்கள், தற்போது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதில், நீலகிரி மாவட்டம் பெண்கள் இலவசமாக அரசு பஸ்சில், குறுந்தொலைவு பயணம் மேற்கொண்டு பயன் பெற்றுள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முரளி கூறுகையில், ''அரசின் விடியல் இலவச பயண திட்டத்தின் கீழ், 98 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், கடந்த பிப்., 25ம் தேதி முதல் நவ., 15ம் தேதி வரை ஒரு கோடி முறை என்ற எண்ணிக்கையில், பெண்கள் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்,'' என்றார்.

