/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுக்கடையால் தொல்லை; மகளிர், பக்தர்கள் அதிருப்தி
/
மதுக்கடையால் தொல்லை; மகளிர், பக்தர்கள் அதிருப்தி
ADDED : டிச 04, 2024 09:47 PM
குன்னுார்; குன்னுார் மவுண்ட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
குன்னுார் மவுண்ட் ரோட்டில், நகராட்சி அலுவலகம், மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தந்தி மாரியம்மன் கோவில், மசூதி அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையை அகற்ற கோரி பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மது கடைக்கு வந்து செல்லும் குடிமகன்கள் அவ்வப்போது சாலையில் விழுந்து கிடக்கின்றனர். போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர் சேகர் கூறுகையில், ''இந்த கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வரும் மதுப்பிரியர்கள், மசூதி மற்றும் தந்தி மாரியம்மன் கோவில் நடைபாதை படிகளில் அமர்வதால், பள்ளி மாணவ, மாணவிகள், பக்தர்கள், மகளிர் சென்று வர சிரமம் ஏற்படுகிறது.
இந்த பகுதிகளில் சில நேரங்களில் அசுத்தமும் செய்து விடுகின்றனர். இந்த கடையை அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.