ADDED : மார் 14, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி தையல் பயிற்சி நிலையத்தில் மகளிர் தின விழா நடந்தது.
பந்தலுார் அருகே உப்பட்டி ஷாலோம் சாரிடபிள் டிரஸ்ட் தையல் பயிற்சி நிலையத்தில், மகளிர் தின விழா நடந்தது. தையல் பயிற்சி ஆசிரியர் சுலோசனா வரவேற்றார். இயக்குனர் விஜயன் சாமுவேல் தலைமை வகித்து, மகளிர் தின விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
'நாவா' சைல்டு பண்ட் பணியாளர் செல்வி அண்ணாள், குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு துறை பணியாளர் யோகேஸ்வரி, எம்.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ருக்மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். தையல் பயிற்சி பெண்கள் பங்கேற்றனர்.
