/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் முதலாவது மலை பயிர்கள் கண்காட்சி காட்டேரி பூங்காவில் பணிகள் துரிதம்

ADDED : மே 28, 2025 11:27 PM

குன்னுார், ; குன்னூர் காட்டேரி பூங்காவில், பொலிவு படுத்தும்பணி துரிதமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனில், ஊட்டியில், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலுாரி வாசனை திரவிய கண்காட்சி, குன்னுாரில் பழ கண்காட்சி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு முதன் முறையாக, காட்டேரி பூங்காவில், மலை பயிர்கள் கண்காட்சி நடத்த தோட்டக்கலைத் துறை முடிவு செய்தது.
இந்நிலையில் கோடை சீசனில் இறுதி நிகழ்ச்சியாக நடக்கும் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மேரி கோல்டு, சால்வியா உட்பட பல்வேறு வகைகளிலான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆயிரக்கணக்கான மலர் தொட்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி கூறுகையில், ''காட்டேரி பூங்காவில், நடப்பாண்டு நடக்கும் முதலாவது மலை பயிர் காட்சியில், தேயிலை காபி, தென்னை, பனைகொக்கோ, முந்திரி, வெற்றிலை, ஆயில் பார்ம்உள்ளிட்ட, 10 வகையான மலை பயிர்கள் காட்சிப்படுத்தி, பல்வேறு வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்பட உள்ளது,'' என்றார்.