/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் படிவம் அனுப்பும் பணி தீவிரம்
/
தேர்தல் படிவம் அனுப்பும் பணி தீவிரம்
ADDED : மார் 20, 2024 01:18 AM
ஊட்டி;நீலகிரி லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல்படிவம் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி லோக்சபா ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி சாகர் என, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், 14 லட்சத்து 18 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.
வரும் ஏப்., 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,ஓட்டு சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் படிப்படியாக நீலகிரிக்கு வந்து கொண்டிருக்கின்றன.
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் பொருட்கள், அரசு அலுவலர்களால் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதில், 'வேட்பாளர்களின் முகவர்கள்,நியமன கடிதம், அடையாள அட்டைக்கான படிவம், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கான படிவம், வாக்காளர் உறுதிமொழி படிவம், தேர்தல் நிறைவடைந்ததற்கான படிவம்,' உட்பட ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு படிவங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரியில் உள்ள ஊட்டி, குன்னுார்,கூடலுார் தொகுதிகளுக்கான படிவங்கள் அந்தந்த தாலுகா அலுவலர்கள் வாகனங்களில் வந்து எடுத்து சென்று தேர்தல் பிரிவில் வைத்துள்ளனர்.

