/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அம்ரித் திட்டத்தில் பணிகள் விறுவிறு

ADDED : மார் 04, 2024 11:55 PM

மேட்டுப்பாளையம்;அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் படி பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகன போக்குவரத்திற்காக அகலமான பாதைகள், நடை பாதைகள், வாகனங்களுக்கான தனி நுழைவு வாயில், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்தம், நடைமேடை மேற்பரப்பு மேம்படுத்தப்படுத்துதல் போன்றவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவது, லிப்ட், எஸ்கலேட்டர் வசதி, ரயில் நிலையத்திற்கு வருபவர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது, துாய்மையான குடிநீர் வசதி, மின்சார சிக்கனத்திற்காக ரயில் நிலையத்தில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.---