/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரூராட்சி அலுவலகம் முன்பு 'பார்க்கிங் தளம்' அமைக்கும் பணி
/
பேரூராட்சி அலுவலகம் முன்பு 'பார்க்கிங் தளம்' அமைக்கும் பணி
பேரூராட்சி அலுவலகம் முன்பு 'பார்க்கிங் தளம்' அமைக்கும் பணி
பேரூராட்சி அலுவலகம் முன்பு 'பார்க்கிங் தளம்' அமைக்கும் பணி
ADDED : நவ 22, 2024 11:27 PM

கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, மண் திட்டு சமன் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி பேரூராட்சி அலுவலக தடுப்புச் சுவர் கடந்த ஆண்டு மழையில் இடிந்து விழுந்தது. இதனால், அலுவலகத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாமல், சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தவிர்க்கும் பொருட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதிதாக தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. ஆனால், குழியில் மண் நிரப்பப்படாமல் இருந்ததால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது, அப்பகுதியில் மண் கொட்டப்பட்டு, சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. அதே இடத்தில், விடுபட்ட பகுதியில், கூடுதல் தடுப்புச் சுவர் அமைக்கும் பட்சத்தில், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த இடவசதி கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் கூறுகையில், 'இப்பணி முடிந்தால், வாகன நெரிசல் குறையும் என்பதால், இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

