/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு சுற்றுலா துறை அமைச்சர் அறிவுரை
/
சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு சுற்றுலா துறை அமைச்சர் அறிவுரை
சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு சுற்றுலா துறை அமைச்சர் அறிவுரை
சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு சுற்றுலா துறை அமைச்சர் அறிவுரை
ADDED : செப் 22, 2024 11:34 PM
ஊட்டி : 'அரசு அலுவலர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, அரசின் திட்டங்களை விரைந்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்,' என, அமைச்சர் தெரிவித்தார்.
ஊட்டியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, மின்சார வாரியம், மகளிர் திட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி, தாட்கோ மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகள் சார்பில், அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
அதில், அரசு அறிவித்த திட்டங்களில் தற்போதைய நிலை, முன்னேற்றம், மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், கண்ணொளி காப்போம், மகப்பேறு திட்டம், நடமாடும் மருத்துவ சேவை, இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும்-48 திட்டம் மற்றும் மகளிர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:
ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட துறைகளின் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அரசின் முக்கிய அறிவிப்புகள், முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்து துறைகளில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மாவட்ட அளவில் தீர்க்க முடியாத கோரிக்கைகள், கலெக்டர் மூலமாக என்னிடம் வழங்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களுக்கு தெரிவித்து தீர்வு காணப்படும். திட்டங்கள் மக்களை சென்றடைய, துறை அலுவலர்கள் சேவை மனபான்மையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், கூடுதல் கலெக்டர் கவுசிக், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்