நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பஸ் நிலையத்தில், ஒருவர் இறந்து கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், 'கேரளா மாநிலத்தை சேர்ந்த சிவன், 32 என்பவர், கோத்தகிரி முள்ளூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர், இரவு வீடு திரும்பவில்லை. காமராஜர் சதுக்கம் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்துள்ளார்,' என, தெரிய வந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

