ADDED : ஏப் 24, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு,; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி கயராடி பகுதியை சேர்ந்தவர் சிவன், 51; கூலி தொழிலாளி. இவர் நேற்று, மங்கலம் அணை பகுதியில் வன எல்லை அருகே, தனியார் தோட்டத்தில் மரக்கிளை வெட்டும் பணிக்கு சென்றார். மதியம், 12:30 மணிக்கு, 35 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டிய போது, மரக்கிளை ஒன்று சிவனின் காலில் விழுந்தது.
மரக்கிளையில் சிக்கி காயமடைந்த சிவனை, சக தொழிலாளிகள் நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டு, கீழே கொண்டு வந்தனர். ஆனால், சிவன் ரத்தக்கசிவால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் அணை போலீசார், வழக்கு பதிவு செய்த விசாரிக்கின்றனர்.

