ADDED : செப் 17, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே, உப்பட்டி துணை மின் நிலையத்தில் மின் பணியாளராக ஆனந்நகுமார்,37, பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை உப்பட்டி -பெருங்கரை சாலையில் மின் கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இது குறித்து மின்பாதை ஆய்வாளர் தங்கவேலுவிடம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், அவர், மின் இணைப்பை துண்டிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், மின்சாரம் தாக்கியதில் ஆனந்தகுமார் கம்பத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பந்தலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஊட்டி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
