/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
/
காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
ADDED : ஜன 10, 2026 06:54 AM
குன்னுார்: குன்னுார் பாய்ஸ் கம்பெனி லுார்துபுரம் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி காயமடைந்தார்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சாலையில் உலா வரும் காட்டெருமைகள் அவ்வப்போது திடீரென ஓடும் போது மக்களை தாக்கி செல்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குன்னுார் அருகே ஜெகதளா ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி கண்ணன்,45, என்பவர் பணியை முடித்து, பைக்கில் வீடு சென்று கொண்டிருந்தார். அப்போது, பாய்ஸ் கம்பெனி லுார்துபுரம் பகுதியில் திடீரென காட்டெருமை தாக்கியது.காயமடைந்த கண்ணன் குனனுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலின் பேரில் கட்டப்பட்டு வனச்சரகர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

