UPDATED : மே 31, 2026 03:15 PM
ADDED : மே 31, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி:கோத்தகிரி அருகே, யானை தாக்கி பழங்குடியின கூலித்தொழிலாளி பனியானது தொடர்பாக வனதுறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி வனக்கோட்டம், கீழ் கோத்தகிரி கெங்கரை கிராமத்திற்கு உட்பட்ட மெட்டுக்கல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த குமார், 44. இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற போது, யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் படி, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட வன அலுவலர் கணேசன், உயிரிழந்த குமாரின் மனைவி சித்ராவுக்கு, மொத்த நிவாரண தொகையில் முதற்கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
