/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
/
காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
ADDED : டிச 31, 2024 06:41 AM
கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில், சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கூட்டமாக வரும் காட்டெருமைகள் காய்கறி தோட்டங்களை சேதம் ஏற்படுத்தி வருவது தொடர்கிறது.
இந்நிலையில், கோத்தகிரி சுள்ளிகூடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகன்,48, என்பவரை தோட்டத்தில் இருந்த காட்டெருமை தாக்கியுள்ளது. அதில், படுகாயம் அடைந்த அவர் சரிந்து விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், மோகனை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைப்பின், அவர் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு, அங்கு, சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறையினர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகனை சந்தித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.