/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் ஏழு வீடுகளை இடித்த காட்டு யானை பிடிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

ADDED : டிச 19, 2024 01:56 AM

பந்தலுார்:பந்தலுாரில் நேற்று முன்தினம் இரவு, ஏழு வீடுகளை காட்டு யானை இடித்ததால், அதனை பிடிக்க வலியுறுத்தி, 'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக 'புல்லட்' என்று அழைக்கப்படும் ஆண் யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இரவு நேரங்களில் கிராமங்களுக்கு வரும் இந்த யானை குடியிருப்புகளை இடித்து, உணவு பொருட்களை ருசித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. நேற்று இரவு மட்டும் ஏழு வீடுகளை இடித்து, அரிசி மற்றும் உணவு பொருட்களை உட்கொண்டது. வீடு சேதமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை சேரங்கோடு பகுதியில், அரசு தோட்ட நிறுவன (டான்டீ) தோட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், 'நாள்தோறும் குடியிருப்புகளை யானை சேதப்படுத்தி வரும் நிலையில், எஸ்டேட் மேலாளர் ஆய்வு செய்ய கூட வரவில்லை; நள்தோறும் இரவு, 7:00 மணிக்கு மேல் குடியிருப்பு பகுதிகளுக்கு புல்லட் யானை வருவதால், அதனை கும்கி உதவியுடன் பிடித்து செல்ல வேண்டும்; வீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
அப்பகுதிக்கு வந்த உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா தலைமையிலான வன குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட, எம்.எல்.ஏ., ஜெயசீலன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'விரைவில் அரசின் உத்தரவு பெற்று, மயக்க ஊசி செலுத்தி யானை பிடித்து செல்லப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது.
இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.