/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நேரு பூங்காவில் களை செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்
/
நேரு பூங்காவில் களை செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்
நேரு பூங்காவில் களை செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்
நேரு பூங்காவில் களை செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்
ADDED : நவ 06, 2024 09:25 PM

கோத்தகிரி ; கோத்தகிரி நேரு பூங்காவில் புல்தரையை வெட்டி, களை செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் பூங்காவை நிர்வகித்து வருகிறது. மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, இப்பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதற்காக, பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்,பூங்காவில் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது.
மேலும், மலர் செடிகளில் மலர்கள் உதிர்ந்து, பட்டு போய் காணப்படுகிறது. இதனால், புல் தரையை சீராக வெட்டி, பட்டுப்போன செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த சில நாட்களில், பூங்காவில் புதிதாக மலர் செடிகளை நடவு செய்ய பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.