/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை இலை பறிக்க தொழிலாளர்கள் அச்சம்
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை இலை பறிக்க தொழிலாளர்கள் அச்சம்
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை இலை பறிக்க தொழிலாளர்கள் அச்சம்
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை இலை பறிக்க தொழிலாளர்கள் அச்சம்
ADDED : பிப் 03, 2025 07:26 AM

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில், காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் அச்சத்திற்கு இடையே, பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் தேயிலை தோட்டங்களில் உலா வருவது தொடர்கிறது. தோட்டங்களில் களை செடிகளை மேய்வதுடன், பெரும்பாலான நேரங்களில் கூட்டமாக அங்கேயே 'டேரா ' போடுகின்றன.
சில நேரங்களில், தொழிலாளர்களை காட்டெருமைகள் துரத்தி வருவதுடன், தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்திற்கு இடையே, பணியை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தொழிலாளர்கள் கூறுகையில்,'விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, காட்டெருமைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஏதுவாக, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'கோத்தகிரியில் தோட்டங்களுக்கு காட்டெருமை வந்தால் தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். உடனடியாக வந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.