/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எஸ்டேட் வழியாக யானைகள் உயிர் தப்பிய தொழிலாளர்கள்
/
எஸ்டேட் வழியாக யானைகள் உயிர் தப்பிய தொழிலாளர்கள்
ADDED : ஜூன் 01, 2025 10:11 PM
பந்தலுார்:
பந்தலுார் அருகே சேரம்பாடி தனியார் எஸ்டேட் பகுதியில், யானைகள் வந்தபோது தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி கண்ணம்பள்ளி பகுதியில் தனியார் தோட்டத்தை ஒட்டிய, வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.
இரவில் தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் அதனை ஒட்டிய வயல் பகுதிகளில் முகாமிடும் யானைகள், காலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்புகிறது.
இரு நாட்களுக்கு முன்பு, காலை தொழிலாளர்கள் வேலைக்கு வந்து, மஸ்டர் களத்தில் இருந்துள்ளனர். அப்போது அதனை ஒட்டிய சாலையில் குட்டிகளுடன் யானைகள் வந்துள்ளன. யானைகளை பார்த்த தொழிலாளர்கள் அறைக்குள் சென்று பதுங்கினர். யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது.
கடும் மேகமூட்டம் நிலவிய நிலையில், யானைகள் வருவதை பார்க்காமல் இருந்திருந்தால், பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
வனத்துறையினர் கூறுகையில், 'எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை செய்யும் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். யானைகள் இருப்பது குறித்து தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.